மோடியின் ஆட்சி யாருக்கானது? கே.எஸ்.அழகிரி கேள்வி

மோடியின் ஆட்சி யாருக்கானது? கே.எஸ்.அழகிரி கேள்வி

மோடியின் ஆட்சி யாருக்கானது? கே.எஸ்.அழகிரி கேள்வி

 நாட்டில் நிலவும் கடுமையான வறுமையையும், பட்டினியையும் மூடிமறைக்கின்ற
வகையில் மத்திய பாஜக., அரசு செயல்பட்டிருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.
அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவரும், உலக மக்கள் தொகையில் மூன்று சதவிகிதமும்,
இந்தியாவில் வறுமையில் இருப்பதாக வலுவான புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

 மேலும் 13 கோடி இந்தியர்களின் குறைந்தபட்ச வருமானம் ஒரு நாளைக்கு
150 ரூபாய்க்கும் கீழே சென்றுள்ளது. வரலாறு காணாத வகையில் பொருளாதார பேரழிவை மக்கள்
சந்தித்து வருகிறார்கள்.

 கடந்த பல வருடங்களாக இந்தியாவில் வறுமையை ஒழிப்பதற்காக செயல்பட்டு
வருகிற ஹிண்ட்ரைஸ் பவுண்டேஷன் தயாரித்த ஆய்வறிக்கையின் படி 20 கோடி இந்தியர்களுக்கு
மேலாக நாள்தோறும் பசியோடும், வெறும் வயிற்றுடன் உறங்குகிறார்கள் என்று கூறியதோடு, பட்டினியால
நாடு முழுவதும் நாள்தோறும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறப்பதாக அதிர்ச்சி
தகவலை வெளியிட்டுள்ளது.

 இந்தியாவை வல்லரசாக்குவேன், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக
கூட்டுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு
வந்த பிரதமர் மோடிக்கு இந்தியாவில் பசி, பட்டினி வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி
வருகிறது.

 மோடியின் ஆட்சியில் ஒரு பக்கம் வறுமையும், வருவாய் இழப்பிலும்
மக்கள் தத்தளித்து வருகிறார்கள். மறுபுறம் பிரதமர் மோடியின் நண்பர்களான அதானியும்,
அம்பானியும் போட்டி போட்டுக் கொண்டு சொத்துகளை குவித்து வருகிறார்கள். மோடியின் ஆட்சி
யாருக்காக நடைபெறுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்