’ஸ்டிக்கர்’ ஒட்டும் கலாச்சாரத்தை உருவாக்கியது அதிமுக அரசு- அமைச்சர் தங்கம் தென்னரசு

’ஸ்டிக்கர்’ ஒட்டும் கலாச்சாரத்தை உருவாக்கியது அதிமுக அரசு- அமைச்சர் தங்கம் தென்னரசு

’ஸ்டிக்கர்’

ஒட்டும் கலாச்சாரத்தை உருவாக்கியது அதிமுக அரசு- அமைச்சர் தங்கம் தென்னரசு

 தமிழகத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரத்தை துவக்கி வைத்தது, அதிமுக ஆட்சி

என்பதை பழனிசாமி மறந்து விட்டாரா? என, அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

 அவர் அளித்த பேட்டியில்,’அதிமுக., அரசின் திட்டங்களுக்கு திமுக., அரசு தன்னுடைய

‘ஸ்டிக்கர்’களை ஒட்டுகிறது என்ற அபாண்டமான குற்றச்சாட்டை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரத்தை துவக்கி வைத்ததே, அதிமுக., ஆட்சி

தான். கடந்த 2011ல் அதிமுக., ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில்,

‘ஸ்டிக்கர்’ஒட்டி, கருணாநிதி பெயரை மறைத்ததோடு, திருவள்ளுவர் படத்தையும் மறைத்தனர்.

 ‘கஜா’

புயலில், சென்னை பெருவெள்ளத்தில் மூழ்கிய போது தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள்

வழங்கிய நிவாரணப் பொருட்களில், அதிமுக., வினர் அவர்கள் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியதை மறந்து

விடக் கூடாது.

Find Us Hereஇங்கே தேடவும்