ஐந்து மாநில தேர்தலைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி டிவிட்!

ஐந்து மாநில தேர்தலைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி டிவிட்!

ஐந்து மாநில தேர்தலைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி டிவிட்!

வெறுப்பைத் தோற்கடிக்க தேர்தலே சரியான வாய்ப்பு என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா சனிக்கிழமை அறிவித்தார். 

மேலும், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வரும் 15ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். 

இந்நிலையில், பிரதமர் மோடியின் பாஜக., அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி  தன் டிவிட்டர் பக்கத்தில், ‘வெறுப்பைத் தோற்கடிக்க இதுவே சரியான வாய்ப்பு’ என 5 மாநில தேர்தலைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்