மத்திய அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் - ஒபிஎஸ் கோரிக்கை

மத்திய அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், இந்த விலக்கு ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும், விரிவுபடுத்தினால், மாற்றுத்திறனாளிகள் மற்றும், கர்ப்பிணி பெண்களின் நலம் காக்கப்படுவதோடு, அரசு ஊழியர்கள் தொற்று பாதிப்பு கணிசமாக தடுக்கப்படும். 

மத்திய அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக., சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்