நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

நீட்டுக்கு முன்னரும், பின்னரும் எத்தனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்தது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, பாஜக., மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன் கூறும் போது, நீட் தேர்வைப் பயன்படுத்தி மாணவர்களைத் தூண்டிவிட திமுக., முயல்கிறது. நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீட்டுக்கு முன்னர் மருத்துவ சீட்டுகள் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்ட காலத்தில் எத்தனை அரசு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான சீட் கிடைத்தது. 

இது தொடர்பாக தமிழக மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் இதனைச் சுட்டிக் காட்டும் கடமை திமுக அரசுக்கு உள்ளது என தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்