டாஸ்மாக் கடைகளை மூடுக - ஜி.கே.மணி

டாஸ்மாக் கடைகளை மூடுக - ஜி.கே.மணி

சட்டமன்ற பேரவையில் பேசிய ஜி.கே.மணி மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

சட்டமன்ற பேரவையில் இன்று (ஜன். 06) பேசிய  பாமக தலைவர் ஜி.கே.மணி , "நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பாமக துணை நிற்கும். 10.5% இடஒதுக்கீட்டில் சிக்கல்களை களைய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி " எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. மதுக்கடைகளால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் அதனையும் மூட வேண்டும்" என பேரவையில் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்