நீட் தேர்வு விவகாரம்: ஆளுநர் பதவி விலக வேண்டும் – டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

   நீட் தேர்வு விவகாரம்: ஆளுநர் பதவி விலக வேண்டும் – டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

நீட்

தேர்வு விவகாரம்: ஆளுநர் பதவி விலக வேண்டும் – டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

 நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் விவகாரத்தில் தமிழக

ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும் என, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு

வலியுறுத்தியுள்ளார்.

 நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பாக மத்திய உள்துறை

அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க முயற்சிகள் மேற்கொண்ட

நிலையில், பல்வேறு காரணாங்களால் அந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்தது.

 இந்நிலையில் இன்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்ற

தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

 அப்போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழக அரசு நிறைவேற்றிய

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.

இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது.

 ஆளுநர் அரசியல் சட்டத்தை குழிதோண்டி புதைத்துள்ளார். மேலும், நீட் தேர்வுக்கு

எதிரான மசோதா மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சந்திக்க முயன்ற தமிழக நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

 கடந்த

10 நாட்களாக மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க முயற்சித்து  வருகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் உடனடியாக

பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்தார். 

Find Us Hereஇங்கே தேடவும்