ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரம்; அதிமுக மனு தள்ளுபடி!!

 ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரம்; அதிமுக மனு தள்ளுபடி!!

ஜெயலலிதாவின்
வேதா இல்ல விவகாரம்; அதிமுக மனு தள்ளுபடி!!

 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரத்தில் அதிமுக., தொடர்ந்த மேல்
முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

 மறைந்த
முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியதை ரத்து செய்த
தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் எனக் கூறி அதிமுக., தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை
சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் தோட்டத்தில்
உள்ள, வேதா நிலையமாக மாற்றுவதற்கு அரசு கையகப்படுத்தியது. அரசின் கையகப்படுத்தும் நடவடிக்கையை
எதிர்த்தும் வேதா நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையை கைவிட்டு தங்களிடம் ஒப்படைக்க
கோரியும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின்
சகோதரரின் மகள் தீபா மற்றும் தீபக் வழக்கு தொடர்ந்தனர்.இம்மனுக்களை விசாரித்த நீதிபதி சேஷாயி, கையகப்படுத்தும் உத்தரவை
ரத்து செய்து, இல்லத்தின் சாவிகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து அதிமுக சார்பிலும், ஜெயலலிதா நினைவு இல்ல
அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாதயாய், சத்திகுமார் சுகுமார
குருப் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘ஜெயலலிதா இல்லம் பொது நோக்கம் இன்றி
அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நினைவிடம் இருக்கும் நிலையில்,
இரண்டாவது நினைவிடம் தேவையற்றது எனக்கூறி தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லும் எனக்கூறி
மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். 

Find Us Hereஇங்கே தேடவும்