"மே 2021க்கு பின் நேரிட்ட பேரிடர்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை" - அண்ணாமலை

மே 2021க்கு பின் நேரிட்ட பேரிடர்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு கேட்டுள்ள வெள்ள நிவாரண நிதி மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. நாட்டில் கடந்த மே மாதத்துக்குப் பின் நேரிட்ட பேரிடர்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு முதல்கட்டமாக 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த கட்டமாக தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க உள்ளது" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எஸ்டிஆர்எஃப் எனப்படும் மாநில பேரிடர் நிதிக்கு தாம் தலையிட்ட பிறகே தமிழ்நாடு அரசு மாநில அரசின் 25 சதவிகித பங்கான 300 கோடி ரூபாயை ஒதுக்கியது" எனவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்