தமிழக செய்தித் துறை அமைச்சருக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி
தமிழக
செய்தித் துறை அமைச்சருக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு கொரோனா
தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் நேர்முக
உதவியாளர் செல்லமுத்து இவர் அமைச்சருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் செல்லமுத்துவுக்கு
சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொரோனா பரிசோதனை
மேற்கொண்டார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று
முந்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அமைச்சரின் பிற உதவியாளர்கள் மற்றும் அலுவலகத்தில்
இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் எனப் பலருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக
அமைச்சர் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.