அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றியவர்களுக்கு ஜாக்பாட்!

அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றியவர்களுக்கு ஜாக்பாட்!

அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றியவர்களுக்கு ஜாக்பாட்!

கொரோனா காலத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றியவர்களுக்கு நடைபெறவுள்ள சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வாளர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை மேம்படுத்தும் வகையில், ஒப்பந்த முறையில் சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று காலத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வெவிலியர்களின் அரிய பணியினை கருத்தில் கொண்டு மாவட்ட சங்கங்களின் வாயிலாக தேர்வு நடைபெறும் போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்கள் பணிபுரிந்தமைக்கான முன்னுரிமை அளிக்கப்பட்டு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. 

செவிலியர்கள் மற்றும் சுகாதார் ஆய்வாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

Find Us Hereஇங்கே தேடவும்