குடியரசுத் தலைவர் ஒப்புதல்!!

வேளாண் சட்டங்கள் ரத்து!

வேளாண்

சட்டங்கள் ரத்து!

குடியரசுத் தலைவர் ஒப்புதல்!!

 

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக

விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் இந்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 

இதைத் தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக பிரதமர் நரேந்திர

மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

 

அதன்டி கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதும்,

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை அத்துறையின் அமைச்சர் நரேந்திர

சிங் தோமர் தாக்கல் செய்தார்.

 

குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், மசோதாவை ரத்து செய்வதற்கு பெரும்பாலான

எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண்

சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேறியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக

மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கான ஒப்புதல் கிடைத்தது. இதனால் மூன்று வேளாண்

சட்டங்களும் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டன.

 

 

 

 

 

 

 

Find Us Hereஇங்கே தேடவும்