அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா நீக்கம்!

அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா நீக்கம்!

அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா நீக்கம்!

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா அதிமுகவின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய அதிமுக தலைமையாக உள்ள ஒபிஎஸ், இபிஎஸ் குறித்து எதிரான கருத்துக்களை அன்வர்ராஜா தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். 

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் எதிரான வகையில் செயல்பட்டதால் அன்வர்ராஜா நீக்கபட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

 அதிமுக செயற்குழு இன்று கூட்டப் படவுள்ள நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்