நம்பர் 1 முதலமைச்சர் என்பது எனக்கு பெருமையல்ல ,நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை!

நம்பர் 1 முதலமைச்சர் என்பது எனக்கு பெருமையல்ல ,நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை!

திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.அதன் பிறகு முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், 4,335 பேருக்கு 55.65 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலவர்  வழங்குகினார்.

மேலும் பேசிய அவர், திருப்பூருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு.அண்ணா, பெரியார் என இருபெரும் தலைவர்கள் முதன்முறையாக சந்தித்துக்கொண்ட திருப்பூரில் அரசு விழாவில் கலந்துகொண்டதில் பெருமையடைகிறேன் என்று கூறினார்.

திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்பதுதான் ஆனால், கடந்த ஆட்சியில் அது எங்கே போனது என்றே தெரியவில்லை. அதுகுறித்தெல்லாம் இங்கே பேச விரும்பவில்லை, ஏனெனில் இது அரசு நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி அல்ல  என தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து 6 மாதம்தான் ஆகின்றன. 6 மாதத்தில் இவ்வளவு நலத்திட்டங்கள் என்றால், இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன, எவ்வளவோ நலத்திட்டங்கள் செய்ய உள்ளோம் என உரை நிகழ்த்தினார்.

மேலும் நம்பர் 1 முதலமைச்சர் என்பது எனக்கு பெருமையல்ல என்றும் நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை. உத்தரவிடுங்கள் உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன். எங்களை உற்சாகப்படுத்துங்கள் என கூறினார். 

துணை முதல்வராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நிதியுதவி வழங்கும் போது, எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கு நாள் முழுவதும் நின்று கொண்டே நிதியை வழங்கினேன். அதை நினைவு கூர்கிறேன் என்றும் திமுக ஆட்சி அமைந்தபோது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது, இனத்தின் ஆட்சியாக இருக்கும் என தெரிவித்தேன். அதேபோல் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்