பிரதமர் மோடி வேளாண் திட்டங்களை திரும்பப் பெற்றதற்கு நன்றி - எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் மோடி வேளாண் திட்டங்களை திரும்பப் பெற்றதற்கு நன்றி - எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் மோடி வேளாண் திட்டங்களை திரும்பப் பெற்றதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.இந்நிலையில் இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கும் திரும்பபெறப்படுவதாக அறிவித்துள்ளார்.மேலும் இது இன்று முதல் அமலுக்கு வரும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து எல்லையில் கூடியுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில்  வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றமைக்கும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்ததற்கும் நன்றி என பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிவீட் செய்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்