ஜெய்பீம் படம் அடித்தட்டு மக்களின் பிரச்னையை அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது – அண்ணாமலை!

ஜெய்பீம் படம் அடித்தட்டு மக்களின் பிரச்னையை அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது – அண்ணாமலை!

ஜெய்பீம் திரைப்படத்தை பாஜக வரவேற்கிறது என  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் ,சூர்யா நடித்த ஜெய் பீம் படம் இருளர் மக்களின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக உள்ளது.ஜெய் பீம் படம் பாமர மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,அதற்கு கடும் கண்டனத்தையும் பெற்றுள்ளது.அரசியல் தலைவர்கள்,திரை பிரபலங்கள் உட்பட அனைவரும்ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படம் வன்னியர் மக்களை தவறாக சித்தரிக்கும் விதமாக அமைந்திருப்பதாக வன்னியர் மக்கள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்,ஜெய்பீம் திரைப்படம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்த நிலையில்,ஜெய்பீம் அற்புதமான திரைப்படம்.அடித்தட்டு மக்களின் பிரச்னையை அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது; ஜெய்பீம் திரைப்படத்தை பாஜக வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து படைப்பாளிகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.படைப்பாளிகளும் யாருடைய மனதும் வருத்தப்படாமல் படைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்