நவம்பர் 22ல் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம்!!!

நவம்பர் 22ல் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம்!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ தாண்டியது. இதற்கிடையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.5, 10 என மத்திய அரசு குறைத்தது. 

இந்நிலையில் வரும் நவம்பர் 22ம் தேதி தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான வரியைக் குறைக்க வலியுறுத்தி தமிழக முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் மழை, வெள்ள விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும்,  முதலமைச்சர் இன்னும் உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறுகிறது என்பது மக்களுடைய கருத்து என்றும், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுடைய பணியை செய்கிறோம் என்றும் அவர் கூறினார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்