நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் - அண்ணாமலை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் - அண்ணாமலை!
விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் ஆனால் தமிழ்நாட்டு நலனுக்காக ஆக்கப்பூர்வமான விஷயங்களை பாஜக தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்; எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் ஆனால் தமிழ்நாட்டு நலனுக்காக ஆக்கப்பூர்வமான விஷயங்களை பாஜக தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் வெள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்ட உடன், தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டி தமிழக பாஜகவும் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றும் 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்