பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தவில்லை!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர்
முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தவில்லை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பருவமழை நடவடிக்கைகளில்  திட்டமிட்டு செயல்படவில்லை  என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவ மழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இன்னும் பல பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலையோரங்களில் நீர் வடியாமல் காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றன.

இந்நிலையில் மயிலாப்பூர் பகுதியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது,பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர்
முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தவில்லை என்றும் 
மழைநீரை வெளியேற்றும் பணி 4 இடத்தில்தான் நடக்கிறது  என்றும் வேறு எங்கும் நடக்கவில்லை என்றும்
தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்