பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை -எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!


பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை -எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர்,தமிழக அரசின் திட்டமிடாத காரணத்தால் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மோட்டார்களை வைத்து மழை நீரை வெளியேற்ற வேண்டும். மக்கள் குடிநீர்,மின்சாரம் பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசு போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். தமிழக அரசு முறையான எற்பாடுகளை செய்யாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் காலத்தில் அம்மா உணவுகத்தை செயல்பட விடாமல் திமுக அரசு தவிர்த்து வருகிறது என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்