எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்!

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

 திமுக ஆட்சி பொறுப்பேற்று இதிலிருந்து பல்வேறு அமைச்சர்களின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றப்பட்டது.அதாவது எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இருந்து 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் பணமும், நிலம் தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பரிவர்த்தனைகள், 2 கோடி ரூபாய்க்கான வைப்புத் தொகை, ஹார்ட் டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 
புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்ததுள்ளது.
 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்