பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகப்படுத்திய முட்டாள்தான் அதை குறைக்க வேண்டும் -தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!

பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகப்படுத்திய முட்டாள்தான் அதை குறைக்க வேண்டும்  -தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!


பெட்ரோல், டீசல் மீதான வாட்
வரியை உயர்த்திய முட்டாள்தான் குறைக்க வேண்டும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்  தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை சில நாட்களுக்கு முன்பு குறைத்தது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5ம், டீசல் விலை ரூபாய் 10ம் குறைந்தது.
இதையொட்டி கேரளா புதுச்சேரியிலும் பெட்ரோல் டீசலுக்கான வரி குறைக்கப்பட்டது. இதையொட்டி பஞ்சாபிலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 10-ம் ,டீசல் விலை ரூபாய் 5ம் குறைக்க அம்மாநில அமைச்சரவையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தலைமையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கருத்து தெரிவித்துள்ளார்.பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தெலங்கானா மாநில அரசு உயர்த்தவே இல்லை. அப்படியிருக்கும்போது எந்த முட்டாளும் எங்களை வரியை குறைக்கச் சொல்ல முடியாது. வரியை உயர்த்திய முட்டாள்தான் அதைக் குறைக்க வேண்டும் என்றும் செஸ் வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என 
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்