முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக தேனியில் பாஜகவினர் போராட்டம்!

முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக தேனியில் பாஜகவினர் போராட்டம்!

முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக  தமிழக அரசை கண்டித்து தேனியில்  பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் திறந்ததாக தமிழகம் முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிய நிலையில், அவருடைய அந்த பேச்சு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் எட்டாம் தேதி திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இதையொட்டி,இன்று முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.
மேலும் போராட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்