சென்னை வானிலை மையத்திற்கு சொந்தமான ரேடார் பழுதடைந்துள்ளதை சரி செய்ய வேண்டும் - வெங்கடேசன் எம்பி!

சென்னை வானிலை மையத்திற்கு சொந்தமான ரேடார் பழுதடைந்துள்ளதை சரி செய்ய வேண்டும் - வெங்கடேசன் எம்பி!

சென்னை வானிலை மையத்திற்கு சொந்தமான ரேடார் பழுதடைந்துள்ளதை சரி செய்வதில் அலட்சியமாக செயல்படுவதாக வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை மையத்திற்கு சொந்தமான ரேடார் பழுதடைந்துள்ளதை சரி செய்வதில் அலட்சியமாக செயல்படுவதாக வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்க்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு மழை அதிகமாக கிடைப்பது வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் என எல்லோரும் அறிந்ததே.குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக புயல்களின் தன்மை, மழையை அவதானிப்பது என
எல்லாமும் காலநிலை மாற்றத்தால் கடினமாகி வருகிறது. எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு நாம் தயாராக இருப்பது பேரிடர் காலங்களில் அறிவுப்பூர்மானது. கனமழை குறித்த முன்னறிவிப்புகளை மேற்கொள்ள உதவும் சென்னை துறைமுகம் அருகேயுள்ள
உள்ள Doppler Weather Radar 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து பலமுறை பழுதாகியுள்ள இந்த ரேடார் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள
நிலையிலும் கூட வேலை செய்யாமல் உள்ளது.
இதனை சரி செய்வதில் கூட அலட்சியம் ; இப்போதுதான் உதிரி பாகங்களுக்கான பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளமுடிகிறது. இதில் மத்திய அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ரேடார் செயல்படுவதை உறுதிபடுத்த கோருகிறேன்.

பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் உடனடியாக புதிய ரேடார் ஒன்றை சென்னையில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதைய @moes செயலாளர் கடந்த ஆண்டே புதிய ரேடார் சென்னையில் பொறுத்தப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை புதிய ரேடார் அமைக்கப்படவில்லை.இது 8 கோடி தமிழ்மக்களின் வாழ்வியலோடு சம்மந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்