பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ பதவி விலகுகிறார்?

பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ பதவி விலகுகிறார்?

மத்திய முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான பாபுல் சுப்ரியோ பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை வெற்றி பெற்ற பாபுல் சுப்ரியோ மத்திய பாஜக அரசில் 2014ம் ஆண்டில் இருந்தே அமைச்சராக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அமைச்சரவை மாற்றத்தின் போது அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து பாஜகவில் இருந்து விலகிய அவர் கடந்த மாதம் கொல்கத்தாவில் அபிசேக் பான்ர்ஜி முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார்.

இந்நிலையில் பாபுல் சுப்ரியோ நாளை பதவி விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தன்னை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்