வரலாற்று ஆவணங்களை விற்பது தேசதுரோகம் - வெங்கடேசன் எம்.பி காட்டம்!

வரலாற்று ஆவணங்களை விற்பது தேசதுரோகம் - வெங்கடேசன் எம்.பி காட்டம்!

வரலாற்று ஆவணங்களை விற்பது தேசதுரோகம் என  மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். 

அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு முடிவெடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,பிரசார் பாரதி அமைப்பின் முடிவை கைவிடுமாறு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.

 இவர்கள் ஏலம் விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும்.நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது.இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்க கூடும். ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது.

இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதை "பணமாக்க" போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது. இப்படித் தரப்படும் உரிமைகளில் "தனி உரிமைகளும்" (Exclusive rights) அடக்கம்.இது அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல. சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை.கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது. கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு.ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்