முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை பதவியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.27.22 கோடி சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.விஜயபாஸ்கர்,எஸ்.பி.வேலுமணி, கே சி வீரமணி, ஆகியோரை தொடர்ந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

முறைகேடாக பெற்ற பணத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 கல்வி நிலையங்கள் தொடங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.2016 முதல் 2021 வரை 7 டிப்பர் லாரிகள்,10 சிமெண்ட் கலவை இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி லாரிகள்,1 BMW கார், 4 கோடிக்கு விவசாய நிலம், 14.57 கோடியில் சென்னையில் பங்களா, 85 சவரன் நகை  28.69 கோடிக்கு பங்குகள் ஆகியவை வாங்கியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு வருமானத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இருபத்தி ஒன்பது இடங்களிலும் ,சென்னையில் நந்தனம் சேமியர்ஸ் சாலை வெங்கடேஸ்வரா மருத்துவமனை அருகில் உள்ள அவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கை சந்திக்கும் அதிமுகவை சேர்ந்த நான்காவது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்