திமுக அடைந்துள்ள வெற்றி புறவாசல் வெற்றி!.. – அதிமுக குற்றச்சாட்டு…

திமுக அடைந்துள்ள வெற்றி புறவாசல் வெற்றி!.. – அதிமுக குற்றச்சாட்டு…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநில தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றி விட்டது திமுக அரசு என குற்றஞ்சாட்டியுள்ள ஒருங்கிணைப்பாளர்கள், மேலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

திமுக அரசும், தேர்தல் ஆணையமும் நடத்தி உள்ள விதிமீறல்களை பட்டியலிட்டால் நாடு தாங்காது எனவும், முறைகேடுகள் தொடர்பான புகார் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையமும் குற்றச்செயல்களுக்கு உடந்தை என சுட்டிகாட்டியுள்ளனர்.

சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பழுதடைந்து இருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது என சந்தேகம் தெரிவித்துள்ள இருவரும்,  திமுகவிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் தாமதமாக தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளதோடு, அதிமுக முகவர்கள் பல இடங்களில் மையங்களில் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்

Find Us Hereஇங்கே தேடவும்