மக்களுக்கு 'விஜயதசமி' வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ் , இ.பி.எஸ்!

மக்களுக்கு 'விஜயதசமி' வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ் , இ.பி.எஸ்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி 'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்னர்.அந்த அறிக்கையில், அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

"செய்யும் தொழிலே தெய்வம்" என்பதையும் "உழைப்பின் மூலமே வெற்றி" என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எங்களது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்