தொடர் தோல்வியில் நா.த.க, ம.நீ.ம!

தொடர் தோல்வியில் நா.த.க, ம.நீ.ம!

9 மாவட்டகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல்ஹாசனின் ம.நீ.ம பெரும் தோல்வியை சந்தித்துள்ளன.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என பல கட்சி மற்றும் சுயேட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அத்துடன் அந்த கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான வேட்பாளர்கள் டெபாசிட் இழ்ந்தனர். இதனால் அக்கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த கட்சியால் ஒரு ஒன்றிய வார்டை கூட பெற இயலவில்லை. இந்த கட்சி சார்பில் போட்டியிட்ட பெரும்பான்மையான இடங்களில் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த நாம் தமிழக கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சி தேர்தலிலும் படுத்தோல்வியை கண்டுள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்