வெற்றியுடன் தேர்தல் களத்தில் கால் பதிக்கும் விஜய் மக்கள் இயக்கம்!..

வெற்றியுடன் தேர்தல் களத்தில் கால் பதிக்கும் விஜய் மக்கள் இயக்கம்!..

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் முதன்முறையாக போட்டியிட்டுருந்த நிலையில், இரண்டு இடங்களில் அவ்வியக்கம் வெற்றியை ருசித்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமண்டூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வடபாதியை சேர்ந்த ரீனா புருஷோத்தமன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்

அதேபோன்று, மாமண்டூர் இரண்டாவது ஊராட்சியில் 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் லோகநாதன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்