அதிமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்ட முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்ட முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்!

கட்சித் தொண்டர்கள் அதிமுகவை விட்டு வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

.அதிமுகவின் 50வது பொன்விழா ஆண்டு- அக்டோபர் 17ல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொன்விழா ஆண்டு முன்னேற்பாடு  பற்றி அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.பிறகு செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், இமயமலை போல இருக்கும் எங்களைப் பார்த்து பரங்கிமலை போல இருக்கும் சிலர் பேசுவது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை என தெரிவித்துள்ளார். 

மேலும் அதிமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்ட முடியாது.எழுச்சியோடு பொன்விழாவை கொண்டாட கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன என்றும் விரைவில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன என தெரிவித்துள்ளார்.சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்