மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜர்!

மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜர்!

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு போலீஸ் 2-வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜர் ஆனார்.

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் கூட்டத்திற்குள்  மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் வேகமாக மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அந்த சம்பவ நடந்த தினத்தன்று உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க  சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் லக்கிம்பூர்கேரிக்கு வருவதற்கு, உத்தரபிரதேச அரசு அனுமதி மறுக்கப்பட்டது.பிறகு பல்வேறு சிக்கலுக்கு பிறகு பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். 

இந்நிலையில் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு போலீஸ் 2-வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.

Find Us Hereஇங்கே தேடவும்