இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

 இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, 1932 அக்டோபர் 8ல் உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் அக்டோபர் 8ஆம் தேதி, இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்திய விமானப்படையில் 1500க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன.உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது பெரிதாக இந்திய விமானப்படை திகழ்கிறது. 

பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், நாட்டைப் பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்துவதிலும் விமானப்படை வீரர்கள் சிறப்பாக செயலாற்றுகின்றனர் என இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்