புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்பப்பெற்றது தேர்தல் ஆணையம்!

புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்பப்பெற்றது தேர்தல் ஆணையம்!

புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக வெளியிட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றது. 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக கடந்த மாதம் 22ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.இந்நிலையில் தேர்தல் நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப்பெற்றதாக மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில், புதுச்சேரியிலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் பல்வேறு குளறுபடிகளும் நீடித்து வந்த நிலையில்,தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.புதிய தேர்தல் அட்டவணை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்