ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. 

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் மாலை நடைபெற உள்ளன.வேட்பாளர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்