கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!

கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!

கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கண்ணகி – முருகேசன் என்ற தம்பதியினர் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்கள் கடந்த 2003-ம் ஆண்டு விஷம் அருந்தவைக்கப்பட்டும், உயிரோடு எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், 18 வருடங்கள் கழித்து,  கடலூர் எஸ்சி, எஸ்டி நீதிமன்ற சிறப்பு நீதிபதி உத்தமராஜா வெளியிட்ட தீர்ப்பில், இந்த இரட்டை கொலை சம்பவத்தில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் .ஆனால் மேல்முறையீட்டில் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என தெரிவித்துள்ளார் .இனியும் காலதாமதம் செய்யாமல் ஆணவக் கொலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறைக்கு முதலமைச்சர் உறுதியான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்