வாரம் ஒரு முறை மட்டும் மக்களை கவனிக்கும் அரசு திமுக அரசு இல்லை!

வாரம் ஒரு முறை மட்டும் மக்களை கவனிக்கும் அரசு திமுக அரசு இல்லை!

சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆணைபுலி பெருக்க மரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து உலக காது கேளாதோர் வார தொடக்க நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.தனது பிறந்த நாளில் பல்வேறு நல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தவர் கருணாநிதி என்றும் மாற்று திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வெட்டை  திறந்து வைத்து பேசிய அவர், ஏழை, எளிய மக்களை, ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கிவிடக்கூடிய அரசுதான் திமுக அரசு என்றும் வாரம் ஒரு முறை மட்டும் மக்களை கவனிக்கும் அரசு திமுக அரசு இல்லை.அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்