நான் முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை – எடப்பாடி பழனிசாமி!

நான் முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை – எடப்பாடி பழனிசாமி!

நான் முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. 

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்போது பேசிய அவர்,விவசாயிகளின் எண்ணங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு. நான் முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை  என்றும் அதிமுகவில் விசுவாசமாக இருந்தால் தொண்டன் கூட முதல்வராக முடியும் என்று கூறியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்