சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள் - மநீம தலைவர் கமல்ஹாசன்!

சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள் - மநீம தலைவர் கமல்ஹாசன்!

அக்.2ல் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள் என மநீம  தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அக்.2ல் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள் ,நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொதுவெளியில் வைக்க மக்கள் நீதி மய்யத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டு என ம்மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்நிலையில், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம சபைகளைப் பொருத்தவரை 'கடைசி மனிதனுக்கும் அதிகாரம்' எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் பணியை மக்கள் நீதி மய்யம் திறம்படச் செய்தது எனும் பெருமை நமக்கு உண்டு.

2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடந்த கிராம சபைதான் கடைசியாக நடந்த கூட்டம். பல்வேறு தரப்பின் அழுத்தத்தினாலும், 'கிராம சபை நடத்தும் என் உரிமையில் மாநில அரசு தலையிட முடியாது' என ஒரு பஞ்சாயத்துத் தலைவர் தொடர்ந்த வழக்கின் அழுத்தத்தினாலும் தமிழக அரசு, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி அன்று கிராம சபை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 615 நாட்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கிராம சபை இது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில்தான் கிராம சபை நடைபெற இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல். தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டங்களில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போதே உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள். கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கைவளச் சுரண்டல், டாஸ்மாக், கைவிடப்படும் நீர்நிலைகள் குறித்து கவனம்கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் உதவட்டும்.

இந்தச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிக வலுவானவை. கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொதுவெளியில் வைக்கவும், கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்