ஸ்டேட் வங்கி இட ஒதுக்கீடு நெறி முறைகளை தொடர்ந்து மீறுகிறது - வெங்கடேசன் எம்,பி!

ஸ்டேட் வங்கி இட ஒதுக்கீடு நெறி முறைகளை  தொடர்ந்து மீறுகிறது - வெங்கடேசன் எம்,பி!

ஸ்டேட் வங்கி துவக்க நிலை தேர்வு முடிவுகளில் இடஒதுக்கீடு முறைகள் தொடந்து மீறப்படுகிறது என வெங்கடேசன் எம்,பி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அந்த அறிக்கையில்,ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன.

 7.11.2020, 11.12.2020, 28.12.2020, 07.01.2021 என வரிசையாக எனது கடிதங்கள், அமைச்சகம், ஸ்டேட் வங்கியின் பதில்களைப் பார்த்தால் அவையே இட ஒதுக்கீடு நெறிகளை அவர்கள் மீறுவதற்கு சாட்சியங்கள் ஆக உள்ளன.ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. 

தற்போதைய முடிவிலும் பொதுப் போட்டி. ஓ. பி.சி, எஸ்.சி பிரிவினருக்கு ஒரே கட் ஆப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டு பிரிவினரை இட ஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல், பொதுப் பட்டியல் கட் ஆப் க்கு அதிகமான மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கிட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலிலேயே கணக்கு வைக்கப்பட வேண்டும்.

இதற்கு ஸ்டேட் வங்கி பதில் அளிக்க வேண்டாம். சமூக நீதி அமைச்சகம் இட ஒதுக்கீட்டு நெறி முறைகளில் கற்றுத் தேர்ந்த நிபுணர்களை கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கட்டும். அதில் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும், சமூக நீதி ஆர்வலர்களும் இடம் பெற வேண்டும்.இப் பிரச்சினையில் தீர்வு காணப்படும் வரையில் எனது முயற்சிகள் தொடரும். நாடாளுமன்றத்திலும் இதற்கான குரல் கேட்கும் என தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்