பெகசாஸ் விவகாரம் குறித்து ஆராய குழு அமைப்பு - உச்சநீதிமன்றம்

பெகசாஸ் விவகாரம் குறித்து ஆராய குழு அமைப்பு - உச்சநீதிமன்றம்

 பெகசாஸ் விவகாரம் குறித்து ஆராய தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பெகசாஸ் விவகாரம் குறித்து ஆராய தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளதாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

மேலும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்திருப்பதாகவும் நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 

Find Us Hereஇங்கே தேடவும்