மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தளுக்கான பரப்புரையை நாளை தொடங்குகிறார் ஈ.பி.எஸ்.!

மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தளுக்கான பரப்புரையை நாளை தொடங்குகிறார் ஈ.பி.எஸ்.!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை முதல்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையை தொடங்குகிறார். 

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்நிலையில் அரசியல் காலம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 25-ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

அதைத்தொடர்ந்து  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை முதல்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையை முதல் நாளில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்