டெங்கு காய்ச்சல் அதிகரிப்பது வெந்த பண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது - ஓபிஎஸ்!

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பது வெந்த பண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது - ஓபிஎஸ்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முடிவடையாத நிலையில்,டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா  கொடுந்தொற்று நோயின் பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலை குறித்த அச்ச உணர்வு பொதுமக்களிடையே இருந்து வருகின்ற சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவது வெந்த பண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. 

தமிழ்நாட்டில் இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்க இருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கான வாய்ப்புதம்? உள்ளன. டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, சாலைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், வீடுகளில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்கள் நடப்பதை தவிர்ப்பதும் மிகமிக அவசியம்.

'வருமுன் காப்போம்' என்பதற்கேற்ப டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் கடமை மாநில,அரசிற்கும். பொதுமக்களுக்கும் உண்டு என தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்