நீட் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு - ம.நீ,ம தலைவர் கமலஹாசன்!

நீட் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு  - ம.நீ,ம தலைவர் கமலஹாசன்!

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு பற்றி ஆராய முதல்வர் ஸ்டாலின் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்திருந்தார்.அந்த குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்தது.  

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அந்த அறிக்கையில், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது. 

கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்திலிருந்து வெறும் 1.7 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளிவிவரமே போதுமானது.

நீட் தேர்வுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ் படிப்பில் சி.பி.எஸ்.இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 90% தனியார் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள். நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிக நோக்கம்தான் என்பது, நான் ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஒன்று. நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக்கொண்டிருப்பது தமிழகம். இந்தத் தேர்வு நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு சிதையும்,

 உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், நீட் தேர்வு தாய்மொழிக் கல்விக்கு எதிரான மனோநிலையை வளர்க்கிறது.நகர்ப்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே.மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்றஉயிர்க்கொல்லித் தேர்வினை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல.இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்