உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது!

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

கிராம சபையில் பங்கேற்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ள நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது என்றும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்