9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது

.தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு  11 இடங்களும்,செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 14 இடங்களும், விழுப்புரம் மாவட்டத்துக்கு 24 இடங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 19 இடங்களும் , தென்காசி மாவட்டத்துக்கு 12 இடங்களும் மாவட்ட ஊராட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டணியில் உள்ள பாஜக உடன் இடப்பங்கீடு முடிவடையாத நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Find Us Hereஇங்கே தேடவும்