பெட்ரோல் டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை!

பெட்ரோல் டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்த வஞ்சகமும் செய்யவில்லை என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 கோவையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்கள் பாஜகவில் இணைந்தனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணி சுமூகமாக செல்கிறது .

பெட்ரோல் டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல் விலை கொண்டு வந்தால் 30 முதல் 35 ரூபாய் குறையும். மாநில அரசு எதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்