கூடுதல் தடுப்பூசி வழங்க பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

கூடுதல் தடுப்பூசி வழங்க பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!

தமிழகத்துக்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்திப்பட்டது. இதேபோல் செப்டம்பர் 19ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், தமிழகத்துக்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்