பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டும் என  நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

 மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 17-ஆம் தேதி ஜிஎஸ்டி  கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்கு மேல்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது.ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் கருப்பொருள்கள் குறித்த தகவல்கள் மேலும் தாமதமாக அளிக்கப்பட்டது. எனவே அதை ரத்துசெய்து விட முடியவில்லை என்றும் உதாரணத்துக்கு, இப்போது இந்த செய்தியாளர் சந்திப்பை முடித்துக்விட்டு  நேரடியாக, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு செல்ல உள்ளோம்  எனவே இதை கருத்தில் கொண்டு  இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று நகைச்சுவையாக கூறினார். 

இவருடைய இந்த கருத்து சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.பத்திரிகையாளர் ஆர். ராஜகோபாலன் என்பவர் தனது ட்விட்டரில் ,டெல்லியில் நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வரிடம் பிடிஆர் தனி விமானம் கேட்டுள்ளார்.  முதல்வர் மறுப்புத் தெரிவிதத்தால் பிடிஆர் டெல்லி செல்லவில்லை. இது, முழுக்க முழுக்க ஈகோ சம்பந்தப்பட்ட விசயம் என்று தெரிவித்தார்.இதற்குப் பதில்  கொடுத்த பி.டி.ஆர்,வடிகட்டிய முட்டாள்தனம்.  கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும். பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா" என்று தெரிவித்தார். 

சௌதா மணி என்ற பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நம்ம நிதி மந்திரி GST கவுன்சில் கூட்டத்திற்கு செல்ல @mkstalin அவர்களிடம் தனி விமானம் கேட்டாராம்.நானும் என் மனைவியும் மட்டுமே தனி விமானத்தில் பயணிக்கும் நிலையில் இவர் எப்படிக் கேட்கலாம் என கண் சிவக்க, அவர் கூட்டத்திற்கு போகலையாம்.தொரைக்கு தனி விமானம் கேட்குதோ??? வெளங்கிடும். என பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பெண்ணின் ட்விட்டர் ரிப்ளைக்கு பதிலளித்தவர், ஒன்றுக்கொன்று முரண்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே நான் கூட்டத்திற்கு செல்லாதது இல்லாத விழாவிற்காகவா? அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? கூட்டம் டெல்லியிலா? லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே" என்றும் தெரிவித்தார். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்